உள்துறை அமித்ஷா 11ந்தேதி சென்னை வருகை!

Must read

சென்னை:

த்திய உள்துறை அமைச்சர் வரும் 11ந்தேதி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முத்தலாக், என்ஐஏ உள்பட காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்று பல்வேறு புதிய மசோதாக்களை அமல்படுத்திய உள்துறை அமைச்சர் வரும் 11ந்தேதி சென்னை வர உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதி உள்ள புத்தகம் வெளியீட்டு விழா வரும் 11ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகவும், அந்த   புத்தகத்தை வெளியிடவே அமித்ஷா சென்னை வரவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள இந்த விழாவில் கலந்து கொண்டு அமித்ஷா  சிறப்புரையாற்றுவார் என்று தெரிகிறது.  மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா பதவியேற்றபின் தமிழகத்திற்கு வருவது இதுவே முதல்முறையாகும்.

More articles

Latest article