கொல்கத்தா: பிரதமர் மோடி, இந்தியாவின் முதல் ‘ஸ்லிப்பர் வந்தேபாரத்’ உள்பட, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களுக்கான அம்ரித் பாரத் ரயில் சேவைகளை இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு – மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில் சேவைகளை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும் பல பகுதிகளுக்கான அம்ரித் பாரத் ரயில் சேவைகளையும் தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக அசாம் மற்றும் மேற்கு வங்கம் செல்கிறார். அப்போது ஹவுரா மற்றும் கவுகாத்தி இடையே இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

அத்துடன், நான்கு புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில் தமிழ்நாடு மேற்கு வங்கம் இடையே செல்லம் ரயில் உள்பட 3 ரயில்களும் அடங்கும். அதன்படி, நியூ ஜல்பைகுரி – நாகர்கோவில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், நியூ ஜல்பைகுரி – திருச்சிராப்பள்ளி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், அலிபுர்துவார் – எஸ்எம்விடி பெங்களூர் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் அலிபுர்துவார் – மும்பை (பன்வெல்) அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார்
அந்த வகையில், தமிழ்நாட்டை இணைக்கும் 3 அம்ரித் பாரத் ரயில் சேவை இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் ரங்கபாணி ரயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுக்கான 3 அம்ரித் பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அத்துடன் 7 அம்ரித் பாரத் உட்பட 11 புதிய ரயில் சேவைகள் இன்று தொடங்கப்படுகின்றன.
மேற்கு வங்கத்தின் மால்டாவில் ரூ.3,250 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் 3 புதிய அம்ரித் பாரத் ரெயில்களுக்கான வழக்கமான ரயில் இயக்க சேவை குறித்த அறிவிப்புகள் தனித்தனியாக வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]