அகமதாபாத்,

குஜராத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா ஒன்றில் பேசிய இந்திய குடியரசு தலைவர், அப்துல் கலாம் எப்படி ஒரு அணு விஞ்ஞானியோ அதுபோல பிரதமர் மோடி ஒரு சமூக விஞ்ஞானி என்று புகழாரம் சூட்டி உள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள குஜராத் யுனிவர்சிட்டியில் 66வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மாநில முதல்வர், கவர்னர் கலந்துகொண்டனர்.  சிறப்பு விருந்தினராக  இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவித் கலந்துகொண்டு  மாணவர்களுக்கு பட்டமளிப்பு சிறப்புரை  ஆற்றினார்.

அப்போது, மோடி குஜராத் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் என்றும் குடியரசு தலைவர்,  மோடி குஜராத்தில் தான் பிறந்து வளர்ந்து, படித்து பின்னர் நாட்டின் பிரதமர் ஆகியுள்ளார். இது உங்களுக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டான, உற்சாகமூட்டும் விசயம் என்றும் கூறினார்.

ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதியான அணு விஞ்ஞானி சில காலம் குஜராத்தில் இருந்தார் என்றும்,  கலாம் குடியரசு தலைறவராக இருந்த போதும், அவர் அடிப்படையில் ஒரு விஞ்ஞானி. அதனால் அவரை நான் விண்வெளி விஞ்ஞானி என்று கூறுவது வழக்கம் என்ற குடியரசு தலைவர், தற்போல் நாட்டில் பல வகையான மாற்றங்களை செயல்படுத்தி வரும் பிரதமர் மோடி, ஒரு சமூக விஞ்ஞானி என்று கூறினார்.