வாரணாசி: கங்கையில் புனித நீராடி, பூஜை புனஷ்காரங்களில் பிரதமர் மோடி ஈடுபட்டார். தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோவில் விரிவாக்க பணிகள் மற்றும் கட்டிங்களை திறந்து வைக்கிறார்.

2நாள் பயணமாக வாரணாசி சென்றுள்ள பிரதமர் மோடி  அங்க. ரூ.339 கோடியில் விரிவாக்கம் செய்ப்பட்ட  காசி விஸ்வநாதர் வளாகத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் 14 மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

பிரதமர் மோடி, தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று காலை சென்றார். அவரை உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  வரவேற்றனர்.

இதையடுத்து, அங்குள்ள  கால பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார் பிரதமர் மோபடி,  அங்கிருந்து,  இரண்டு அடுக்கு படகில்  காசி விஸ்வநாதர் ஆலயம் சென்றார். அங்கு  சென்றடைந்த பிரதமர் புண்ணிய நதியான கங்கையில் புனித நீராடி வழிபாடு நடத்தினார்.

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு, கங்கை நதிக்கரையிலிருந்து செல்லும்போது, குறுகிய தெருக்கள் வழியாகவும், சாலை வழியாகவும் செல்ல வேண்டியதிருந்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். அதை விரிவுபடுத்தும் வகையில்,  கடந்த 2019, மார்ச் 8ம் தேதி ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாக விரிவாக்கத் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த திட்டத்துக்காக அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த,  300 சிறுகடைகள் கையகப்படுத்தப்பட்டன. 1400 கடைக்காரர்களிடம் சுமூகமாகப் பேசி, இழப்பீடுகளை வழங்கி இடங்களைக் கைப்பற்றி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் விரிவாக்கப்பணிகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். காசி விஸ்வநாதர் கோயிலையும், கங்கை நதிக்கரையையும் இணைக்கும் ரூ.339 கோடியில் கட்டப்பட்ட வளாகத்தையும்  திறந்து வைக்கிறார். அத்துடன், இ யாத்ரி சுவிதா கேந்திரா, சுற்றுலா வசதி மையம், வேத கேந்திரா, முமுக்சு பவன், போக்ஸாலா, அருங்காட்சியகம், புகைப்பட அருங்காட்சியகம், உணவுவிடுதி, உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களும் திறக்கப்பட உள்ளது. இதற்காக வாரணாசி நகரம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் 14 மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.   உ.பி., அசாம், அருணாச்சலப்பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, உத்தரகாண்ட் மாநிலங்களின் முதல்வர்கள், பிஹார், நாகாலாந்து துணை முதல்வர்கள் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இதுதொடர்பாக டிவிட் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,  “டிசம்பர் 13ம் தேதி முக்கியமான நாள். காசியில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திட்டத்தை தொடங்கி வைக்கிறேன். இதன் மூலம் காசியில் ஆன்மீக அலை அதிகரிக்கும். அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.