லிட்டர் பெட்ரோல் விலை ரூ.112ஐ தாண்டியது! தொடரும் விலை உயர்வால் பொதுமக்கள் அவதி…

Must read

சென்னை: பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது.  மும்பையில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ.112ஐ தாண்டி உள்ளது.  தொடரும் விலை உயர்வால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் பெட்ரோல் டீசல் விலை கட்டுக்குள் இருந்தது. அப்போது பெட்ரோல் விலை லிட்டர் ரூ.80 முதல் 85 வரையில் இருந்து வந்தது. ஆனால், அதன்பிறகு கடந்த 6 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. தற்போது லிட்டர் பெட்ரோல் டீசல் விலை ரூ.100 கடந்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போதுதான் சிறிது சிறிதாக பொதுமக்கள் கொரோனா பாதிப்புகளில் இருந்து எழுந்து வருகின்றனர். இந்த நேரத்தில் எரிபொருட்களின் தொடர் விலை உயர்வு அவர்களின் முதுகில் மேலும் சுமையை கூட்டியுள்ளது.

தலைநகர் டெல்லியில் இன்றைய  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 106.19 பைசா ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.92 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டெ

கொல்கத்தாவில்,  இன்றைய  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.106.77 பைசா ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 98.03 பைசா ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மும்பையில்,  இன்றைய  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.112.11 பைசா ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.102.89 பைசா ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில்,  இன்றைய  பெட்ரோல் விலை லிட்டர் ரூ.103.31 பைசா ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.26 பைசா ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பரவல் போல, பெட்ரோல் டீசல் விலை உயர்வும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article