டில்லி,

னாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒரிசா கவர்னர் ராம்நாத் கோவிந்த்-ஐ பாரதியஜனதா அறிவித்து உள்ளது.

இன்று காலை நடைபெற்ற பாரதியஜனதா ஆட்சி மன்றக்குழுவில் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதாக, பா.ஜ தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, மாநில கட்சிகளின் ஆதரவை கோரி வருகிறார்.

ஏற்கனவே, பாரதியஜனதா சார்பில் அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட குழு எதிர்க்கட்சி தலை வர்களை சந்தித்து ஆதரவு கோரியுள்ள நிலையில், தற்போது பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்துக்கு எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்துக் கட்சிகளிடமும் ஆதரவு திரட்டுகிறார்.

இதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் ஆதரவு கேட்டு தொலைபேசியில் பேசியுள்ளார்.

மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுகவின் ஆதரவை கோரியுள்ளார்.

தொடர்ந்து,  பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில்  வரும் 22 ம் தேதி சந்தித்துப் பேசி வேட்பாளர் தேர்வு இறுதி செய்யப்படும் என தெரிகிறது.