டெல்லி: ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர் குதிரை விராட் இன்று ஓய்வுபெற்றது. ஓய்வு பெறும் குதிரைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி,  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரியாவிடை கொடுத்தனர்.

நாட்டின் 73வது குடியரசு தின நாள் விழாவையொட்டி டெல்லியல் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடியேற்றினார். அதைத்தொடர்ந்து  முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். டெல்லி ராஜபாதையில் தொடங்கி இந்தியா கேட் வரை அணிவகுப்பு நடைபெற்றது. அந்த அணிவகுப்பில், பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் 21 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது.

குடியரசு தின கொண்டாட்டங்களின் முடிவில் ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர் குதிரை விராட் இன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றது. மூத்த குதிரையான விராட் இன்றைய விழாவில் கவுரவிக்கப்பட்டு ஒய்வு அளிக்கப்பட்டது. இதற்காக ராணுவ தலைமை அதிகாரி பாராட்டு பதக்கம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் அவருக்கு குடியரசுத் தலைவர் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் விராட்டுக்கு பிரியாவிடை அளித்தனர்.