டில்லி,

சியான் நாட்டு தலைவர்கள் ராஷ்டிரபதி பவனுக்கு வருகை தருவதையொட்டி, ராஸ்டிரபதி பவனில் சிவப்பு கம்பள வரவேற்பு விரிக்கப்பட்டது.

ஆனால், அந்த கார்பெட்டை குடியரசு தலைவர் ராமநாத் கோவிந்த் அகற்றச்சொல்லிவிட்டதாக குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஷ்டிரபதி பவனில் உள்ள தர்பார் ஹாலில் விலை உயர்ந்த பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால் அதன்மேல் எந்தவித விரிப்பும் விரிக்க வேண்டாம் என குடியரசுதலைவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு ஆசியான் மாநாட்டுக்கு வருகை தந்துள்ள தலைவர்கள் நேற்று இந்திய குடியரசு தின விழா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் அவர்களுக்கு ராஷ்டிரபதி பவனில் சிறப்பான விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆசியான் நாட்டு தலைவர்கள் வருகைக்காக குடியரசு தலைவர் மாளிகையில் விரிக்கப்பட்ட சிவப்பு கம்பளத்தை குடியரசு தலைவர் அகற்றச்சொன்னதால் பரபரப்பு ஏற்படுத்தியது.

ஆசியான் நாட்டு தலைவர்கள் வருவதையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த ராம்நாத், தலைவர்கள் வரும் படிக்கட்டுகளில் விரிக்கப்பட்ட சிவம்பு கம்பளத்தை அகற்ற உத்தரவிட்டதாக குடியரசு தலைவர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குடியரசு தலைவர் மாளிகை தனது வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், இத்தாலியில் இருந்து இறக்கப்பட்ட பல்வேறு வகையான அழகான வடிவியல் முறைகள் கொண்ட பளபளப்பான பளிங்கு கற்கள் ஹாலில் பதிக்கப்பட்டுள்ளது.  இது ஹாலின் அழக்கு மேலும் அழகு சேர்ப்பதாகவும், தர்பாலின் ஹாலின் கம்பீரத்தை பறை சாற்றுவதாகவும் உள்ளது.

மேலும், ஹாலிலில், வெள்ளை, மக்ரானா சாம்பல் பளிங்கு, பரோடா மற்றும் அஜ்மீர் பசுமை மற்றும் ஆல்வார், மக்ரானா மற்றும் ஹரிபாஸ் ஆகியவற்றிலிருந்து இளஞ்சிவப்பு போன்ற வண்ணக்கற்களால் தர்பால் அலங்கரிப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த அழகு மறையாமல் அழகுற செய்யும் விதத்திலேயே, ஆசியான் நாட்டு தலைவர்கள் வருகையின்போது, ஒவ்வொரு சிறிய செயலும் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் கூறி உள்ளது.

மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ள  ராஷ்டிரபதி பவனில் உள்ள தர்பார் ஹாலில்தான் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு. மேலும் மத்திய மந்திரி சபை பதவி ஏற்பு போன்ற நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெறுவது வழக்கம்.