குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் காஞ்சிபுர பயணம் ரத்து

Must read

டில்லி: குடியரசுத்தலைவர்  பிரணாப் முகர்ஜி ஒரு நாள் சுற்றுப்பயணமாக வரும் 24-ந் தேதி காஞ்சிபுரம் வர இருந்த பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சங்கரா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்பதற்காக  குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் மே 24ம் தேதி காஞ்சிபுரம் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதற்காக தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வரும் அங்கிருந்து ஹெலிகாப்டரில் காஞ்சிபுரம் செல்ல இருப்பதாகவும், பிறகு  பின்னர் குண்டு துளைக்காத காரில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் கோவில் மற்றும் ஏகாம்பரநாதர் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சங்கரமடம் சென்று சங்கராச்சாரியார்களிடம் ஆசி பெற்று பிறகு,  ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாக்களில்  கலந்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதற்கான விரிவான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இந்த நிலையில் பிரனாப் முகர்ஜி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

More articles

Latest article