டில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் காரத்தி சிதம்பரம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் தங்கள் வசம் இருக்கினறன என்று சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கார்த்தி சிதம்பரம், கடந்த 2007 ம் ஆண்டில் ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு கோடிக்கணக்கில் அந்நிய செலாவணியை பெற்று தந்ததாக புகார் பதிந்து, அந்த வழக்கை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்காக மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பதவி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகவும் பேசப்படுகிறது.

இதையடுத்து கார்த்தியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள் குறித்து தெரிவிக்க சி.பி.ஐ., அதிகாரிகள் மறுத்துவிட்ட போதும், கார்த்திக்கு எதிரான முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக கூறுகின்றார்கள்.

ஐ.என்.எக்ஸ் மீடியா கார்த்தியின் நிறுவனத்திற்கு பணம் தந்ததற்கான ரசீதுகளையும் இ-மெயில் பரிமாற்றங்களையும் சி.பி.ஐ., கைப்பற்றியுள்ளதாக பேசப்படுகிறது. இதற்கிடையே கார்த்தி லண்டன் சென்றுவிட்டார்.

“அவர் ரிட்டர்ன் டிக்கெட்டுடன் வெளிநாடு சென்றிருப்பதால் அவர் திரும்பியதும் சம்மன் அனுப்பி விசாரிக்கப்படுவார்” என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.