டெல்லி: மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

தலைநகர் டெல்லியில், ராஜ்காட் (Raj Ghat) (இந்தி: राज घाट), யமுனை ஆற்றங்கரையில்  மகாத்மா காந்தி நினைவிடம் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்தில், அவரது  படுகொலைக்குப் பின் அவரது பூத உடல் 1948 , ஜனவரி 31ந்தேதி இவ்விடத்தில்  எரியூட்டப்பட்டு, பின்னர் நினைவிடம் (சமாதி) அமைக்கப்பட்டது.

இன்று மகாத்மாவின் 155வது நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறத. இதையொட்டில் டெல்லியில் அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்து. இந்த நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி  மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தங்கர், சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர்கள் தார் ஜிதேந்திர சிங் மற்றும் மீனாட்சி லேகி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.