டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை  தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்திர ஜெயின் தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், புதிய அமைச்சர்களாக, ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள்  அதிஷி, சௌரப் பரத்வாஜ் ஆகியோரை நியமிக்க மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் பரிந்துரை செய்து, மாநில துணைநிலை ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்.

இந்த கடிதத்தை ஏற்ற ஆளுநர், அதை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். அதன்படி, டெல்லியின் புதிய அமைச்சர்களாக  அதிஷி மற்றும் பரத்வாஜ் நியமனம் செய்ய ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் சுகாதார அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ கடந்த 2017-ல் வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அவரை அமலாக்கத் துறை கடந்த  2022ம் ஆண்டு மே 30-ம் தேதி கைது செய்தது. பல மாதங்களாக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாமல்,  சிறையில் அவர் சொசுசு வாழ்க்கை வார்ந்து வருகிறார்.  இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதற்கிடையில்,  டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை  2023ம் ஆண்டு பிப்ரவரி  26ஆம் தேதி 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் சிபிஐ கைது செய்தது.இதையடுத்து, மணீஷ் சிசோடிய திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, மணிஷ் சிசோடியா மற்றும்  சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்திருந்தார். இருவரின் ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து,   புதிய அமைச்சர்களாக அதிஷி மற்றும் செளரவ் பரத்வாஜை நியமிக்க கோரி, துணை நிலை ஆளுநருக்கு கெஜ்ரிவால் பரிந்துரை கடிதம் அனுப்பினார். அதை ஏற்ற ஆளுநர், அதை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கான அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில்,  ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோரை டெல்லி கேபினட் அமைச்சர்களாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நியமித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய அமைச்சர்களின் பதவி ஏற்பு விழா விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.