அகர்தலா:
திரிபுரா முதல்வராக மாணிக் சகா இன்று பதவியேற்கிறார்.

திரிபுராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் 60 தொகுதிகளில் 55 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 32 இடங்களில் வெற்றி பெற்றது.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக மாணிக் சகா தேர்வு செய்யப்பட்டார்.

இவர் இன்று திரிபுரா முதல்வராக இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில், பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.