சென்னை: அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக, மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், அரசியல் கட்சிகள்வேட்பார்கள்  பட்டியலை வெளியிட்டு வேட்புமனுத் தாக்கலை தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், 2 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள  தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார் என்று தெரிவிக்கப்ப்பட்டுள்ளது. மேலும், மத்திய சென்னையில் பார்த்தசாரதி, திருவள்ளூரில் நல்லதம்பி, கடலூரில் சிவக்கொழுந்து, தஞ்சாவூரில் சிவநேசன் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்துடன் எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தம் மேற்கொண்டு, இருவரும் கையெழுத்திட்டனர். இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.