பணம் எடுக்க வங்கி கியூவில் நின்ற பெண்ணுக்கு "குவா… குவா"! அரசு உதவி

Must read


லக்னோ,
ங்கியில் பணம் எடுக்க காந்திருந்த கர்ப்பிணி பெண் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அவருக்கு நிதி உதவி செய்யப்படும் உ.பி.மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் ஜின் ஜாக் நகர் பகுதியை சேர்ந்தவர் நிறைமாத கர்ப்பிணியான  சர்வேசா தேவி. மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுவதால், அருகில் இருந்த வங்கிக்கு சென்று பணம் எடுக்க சென்றார். ஆனால், வங்கியில் ஏற்கனவே பலர் நின்றிருந்ததால், அவரும் வரிசையில் காத்து நின்றார்.
நீண்ட நேரம் நின்றதாலும், அவருக்கு குழந்தை பிறகும் நாள் நெருங்கிவிட்டதாலும், அவருக்கு திடீரென  பிரசவ வலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் வலியால் அலடி துடித்தார். இதை கண்ட அருகில் இருந்த பெண்களை அவரை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
ஒருசில மணித்துளிகளில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. உடனடியாக ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு தாயையும், குழந்தையையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த செய்தி அந்த மாநில முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அங்குள்ள மீடியாக்களும் இந்த செய்தியை பிரபலப்படுத்தின.
இதையறிந்த உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், இதுகுறித்து விசாரித்து, வங்கியில் கியூவில் நின்றபோது குழந்தை பெற்றதால் அந்தப்பெண்ணுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். தொடர்ந்து அதிகாரிகள் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை அந்த பெண்ணிடம் வழங்கினார்.
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு, பொதுமக்கள் வங்கிகளின் வாசலிலும், ஏடிஎம் இயந்திரம் முன்னிலையிலும் காத்து கிடந்து வருகின்றனர். இதன் காரணமாக நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் மரணத்தை தழுவி உள்ளனர்.
இதன் காரணமாக,.உ.பி முதல்வர் அகிலேஷ், வங்கிகள், ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்காக கியூவில் நிற்கும்போது  யாராவது  மரணம் அடைந்தால்,  அவர்களுக்கு அரசு சார்பாக ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது  குறிப்பிடத்தக்கது.
ஆனால், தற்போது குழந்தை பெற்ற கர்ப்பிணிக்கும் ரூ.2 லட்சம் நிவாரணம் அளித்துள்ளார்.

More articles

Latest article