அபுதாபி:

திருமணத்துக்கு முன்பே  காதலனுடன் உறவு கொண்டு கர்ப்பமான பெண்ணையும் அவரது காதலியையும் அமீரக நாட்டு போலிஸ் கைது செய்துள்ளது, உலக அளவில் அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வளைகுடா நாடுகளில் ஒன்று, ஐக்கிய அரபு அமீரகம். இதன் தலைநகர் அபுதாபி. இங்கு, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர் எம்லின் கல்வெர்வெல் வசித்து வந்தார்.  அவரது காதலியும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவருமான    இரினா நோஹாயும் அங்கே பணி நிமித்தம் தங்கியிருக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம்,  வயிற்று வலி  ஏற்பட்டதால், இரினா,  ஒரு மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்றார்.  பரிசோதனையில் அவர், ர்ப்பமாக இருப்பதை மருத்துவர் உறுதி செய்தார்.

அந்த நாட்டுச் சட்டப்படி, கர்ப்பமான பெண், தனது திருமண சான்றிதழை காட்ட வேண்டும். ஒரு வேளை திருமணத்துக்கு முன் கர்ப்பமாகிவிட்டால், அங்கே அது மிகப்பெரிய குற்றம்.

ஆகவே மருத்துவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த காவல்துறையினர் காதல் ஜோடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாங்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக காதல் ஜோடி மன்றாடியும் காவலர்கள் காது கொடுத்து கேட்கவில்லை.

ஆனால் திருமணம் ஆகாததால், அவர்களால் திருமண சான்றிதழை சமர்ப்பிக்க முடியவில்லை. அதனால், மருத்துவமனையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் சிறையில் வாடி வருகிறார்கள்.

இந்த நடவடிக்கைக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆனால் அந்நாட்டு காவல்துறையினர், “தவறு செய்த காதல் ஜோடி சட்டப்படி தண்டிக்கப்பட்டே தீருவர்” என்று தெரிவித்துள்ளனர்.ட

இந்த வழக்கு விரைவி் விசாரணைக்கு வர இருக்கிறது. அந்நாட்டுச் சட்டப்படி,  திருமணத்துக்கு முன் கர்ப்பமானால் நீண்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஆகவே காதல் ஜோடி அச்சத்தில் இருக்கிறது.