வாஷிங்டன்

மெரிக்க அதிபர் தற்போது புதுப் பிரச்னையை உருவாக்கியிருக்கிறார்.  அங்கு ஹெச் -4 விசாவில் பணியாற்றுவோருக்கு ஆபத்து வந்துள்ளது. அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் அமெரிக்காவில்  பணியாற்றும் வெளிநாட்டினருக்கு அடிமேல் அடி விழுந்துகொண்டே உள்ளது. முதலில் வேலை வாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து. அமெரிக்காவில் இருந்து வெளிநாட்டுக்கு கால் சென்டர் வேலைகளை கொண்டு செல்வதற்கு தடைகளை ஏற்படுத்தினார்.  பின்னர் அமெரிக்கர்களுக்கு அதிக சம்பளம் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு ஹெச் – 1B விசா வழங்குவது ரத்து செய்யப்படும் என்று சமீபத்தில் அமெரிக்கா அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது, ஹெச் 4 விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றுவோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கணவன் அல்லது மனைவியுடன் செல்பவர்களுக்கு அமெரிக்காவில் பணியாற்ற இந்த விசா வழங்கப்படுகிறது. தற்போது இந்த விசாவுக்கும் அமெரிக்கா கட்டுப்பாடு விதித்துள்ளது.அமெரிக்க நீதித்துறை வாஷிங்டன் டிசி நீதிமன்றத்தில் இதுதொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது.

அந்த வழக்கில், ஹெச் -4 விசா பெற்று பணியாற்றி வருபவர்களின் வேலைக்கான அதிகாரத்தை 60 நாட்களுக்கு முடக்கி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோவதாக கூறி சேவ் ஜாப் என்ற பெயரில் அமெரிக்கர்கள் தொடர்ந்த வழக்கை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் அதிபர் ட்ரம்ப் அதற்கு வேட்டுவைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. ஒருவேளை இந்த தடை வந்தால்

இந்தியாவிலிருந்தும், ஆசிய நாடுகளிலிருந்தும் அமெரிக்காவுக்கு பணியாற்ற சென்றிருக்கும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவது உறுதி.