கௌதமலா நாட்டில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் திடீரென தீ பற்றியது. இதன் காரணமாக காப்பகத்தில் இருந்த இளம்பெண்கள் 19 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கௌதமலா நாட்டின் சான் ஜோஸ் பினுலா நகரில் உள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் திடீரென தீ பரவியதை தொடர்ந்து, தீ விபத்தில் சிக்கி அங்கு தங்கி இருந்தவர்கள் பலர் தீயில் சிக்கி பரிதாபமாக பலியாகினர்.

இந்த கோர விபத்தில் பலியானவர்கள் இளம்பெண்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன் காரணமாக இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

400பேர் தங்கும் வசதியுள்ள அந்த காப்பகத்தில், அதிகமானோர் தங்கியிருந்ததாகவும், நிர்வாக குளறுபடிகள் மற்றும் பாலியல் தொந்தரவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பி ருக்கலாம் என்றும்,  காப்பகத்தில் தங்கி இருந்தவர்களாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த கொடூர தீ விபத்தில் இளம்பெண்கள் உள்பட 19 பேர் பலியானதாகவும், மேலும் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தீவிபத்து குறித்து கேள்விப்பட்டதும், காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் காப்பகம் முன் திரண்டனர். இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இந்த காப்பகத்தில் தங்கியிருந்த பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதுகுறித்து இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டருப்பதாகவும் தகவல்கள் கூறுகிறது.

மேலும் இந்த காப்பகத்தில் தங்கி இருந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு மர்மமான முறை யில் இறந்துகிடந்ததாகவும், பாலியல் தொந்தரவு நடந்தது  என பல்வேறு குற்றச்சாட்டுகள் அந்த காப்பக நிர்வாகத்தினர் மீது கூறப்படுகின்றன.

மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.