இந்திய செல்வந்தர்கள்வெண்மைக்கனவு:  தோலுரிக்கப்படும்நேபாளப்பெண்கள்

Must read

சிவாஜி படத்தில் ஒருக் காட்சியில், கதாநாயகி ஸ்ரேயா கருப்பாய் இருப்பதால் தான் உன்னை எனக்குப் பிடிக்கவில்லை எனக் கூறிவிடுவார். அத்னாய்யடுத்து ரஜினி தன் நிறத்தை வெளுப்பாக்க எடுக்கும் வேவேறு வகையான முயற்சிகள் காமெடியாய் சித்தரிக்கப் பட்டிருக்கும்.

உண்மையில், பண வசதிப் படைத்தவர்களுக்கு அது அரிதான விசயமில்லை. கோடிஸ்வரர்கள் பணத்தை வாரி இறைத்து தன் கருப்பு நிறத்தை வெள்ளையாக்கிக் கொள்ளும் மருத்துவ வசதி உள்ளது. “ காஸ்மெடிக் சர்ஜரி” எனும் அழகுக்கான அறுவைசிகிச்சை மூலம் வெள்ளைத் தோலாய் மாற்றிக் கொள்ள முடியும்.

சிறுநீரகத்தை ஏமாற்றி வாங்கும் மோசடி போல், ஏழைகளை ஏமாற்றி தோல் திசுக்களை திருடும் தொழிலும் கனஜோராய் நடைபெற்று வருகின்றது.

இந்தியாவில் சிறுநீரக மோசடி/உடல் உறுப்புகள் தானம்  தொடர்பான சட்டங்கள் வலுவாக இருக்கின்றன.  கிட்னி கோளாறினால் பாதிக்கப்படும் பணக்காரர்கள், நன்கொடையாளர்கள் பட்டியலில் காத்திருக்கத் தயாராயில்லாமல் இலங்கை போன்ற அண்டை நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் சேருவதும், அறுவை சிகிச்சை மூலமாக அவர்களுக்கு இந்தியர்களின் சிறுநீரகம் பொருத்தப்படுவதும் சகஜம். மாற்று சிறுநீரகம் தேவைப்படும் நோயாளிகள், ரூ.60 லட்சம்வரை அளித்துள்ளனர். தமிழகம், தெலுங்கானா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த அப்பாவி கூலித் தொழிலாளர்களை, கொழும்புவிலும் பிற வெளிநாடுகளிலும் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்கிறார்கள். கொஞ்ச நாட்கள் அவர்களை அங்குத் தங்க வைத்தபின் சிறு நீரகத்தை விற்கத் தூண்டுகிறார்கள். ரூ.5 லட்சம்வரை சிறுநீரகத்திற்கு பணம் தருகிறார்கள். அதே சிறு நீரகங்களை கொழும்புவில் ரூ.50 லட்சம்வரை விற்கின்றனர். இந்தியாவிற்குள்ளும் மோசடியாய் சிறுநீரகம் திருடுவதும், ஏழ்மை, வறுமை காரணமாகவும், மகளின் திருமணம் காரணமாகவும் குஜராத், மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகள் பலர் சிறுநீரகத்தை விற்று வருகின்றனர்.
இப்போது, அமெரிக்கா, இந்திய கோடிசுவரர்களின் வெள்ளைத்தோல் கனவிற்கு நேபாளைத் சேர்ந்த பெண்கள் தான் பலிகடாவாக்கப் படுகின்றனர்.
இதுகுறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

நேபாளத் தலைநகர் காத்மண்டுவிலிருந்து 75 கி.மி.யில் உள்ள சிந்துபால் சவுக் கிராமத்திலிருந்து சிறுமியாய் கடத்தப்பட்டு மும்பையில் உள்ள சிகப்பு விளக்குப் பகுதியில் விற்கப்பட்டவர் சுசிலா தாபர் (வயது 30). அங்குப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருந்தபோது, ஒருநாள் அவரது முதுகில் ஒரு அடி நீள-அகலத்திற்கு தோல் சிதைந்த காயம் ஏற்பட்டது. குடிபோதையில் ஏதாவது வாடிக்கையாளர் சிகரெட்டால் சுட்டிருக்கலாமென நினைத்திருந்தார். அது வடுவாய் மாறிப் போனது. மற்றப் பெண்கள் சாதாரணமாய் ஒரு நபரிடமிருந்து 5000 வரைச் சம்பாதிக்க, தன் அழகு சிதைந்த தையும் பொருட்படுத்தாது தம்மிடம் வரும் வாடிக்கையாளரிடம் ஆணுறை பயன்படுத்தக் கட்டாயப்படுத்தினால், ₹ 300-500 கொடுக்க முன்வரவில்லை. எனவே, சுசிலா ஒருவழியாய் மும்பையிலிருந்து தப்பித்து சொந்த ஊருக்குத் திரும்பினார்.

அவரது தொழிலைத் தெரிந்துக்கொண்ட அவரது ஊர்மக்கள் அவரை விரட்டிவிட்டனர். தன் அழகு சிதைக்கப் படாமல் இருந்தல், தினமும் 5000 ரூபாய் வரை சம்பாரிக்க முடியும். ஆனால் வேறு வழியில்லாததால், ஒரு தரகர்மூலம், காத்மண்டு அருகில் உள்ள “தபால்” லில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் வேலைக்குச் சேர்ந்தார், தரகருக்கு மூன்று மாத சம்பளத்தை கமிஷனாகவும் தந்தார். அப்போது தன் முதுகில் இருப்பதைப் போலவே இன்னொரு பெண்ணின் முதுகிலும் தோலுரிக்கப்பட்ட வடு இருந்தத்தைப் பார்த்தபிறகு, அவரிடம் நீண்ட விவாதத்திற்குப் பிறகு, அந்தப் பெண்மணி, குடும்பச் சூழ்நிலை காரணமாக , ₹ 10,000க்கிற்காக தன் உடலிலிருந்து 2 அடி நீளமுள்ள தோலை விற்று பணம் வாங்கியதாகவும் தெரிவித்தார். அது கடனை அடைக்கவே சரியாக இருந்த்தால், அதே முகவர்மூலம், தான் ஒரு பாலியல் தொழிலாளி மாறியதையும் கூறினார். அப்போது தான் தன் உடம்பிலிருந்து தோல் திருடப் பட்டதை உணர்ந்துக் கொண்டார் சுசிலா.

“பாதிக்கப்பட்டபெண்கள்”
நேபாளத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் தான் “வெள்ளைத் தோல்” முகவர்களின் இலக்கு. பாலியல் தொழிலாளிகளிடம் செல்லும் சில ஆண்கள், தன் மனைவியிடம் தீர்த்துக்கொள்ள முடியாத சில வக்கிரமான பாலியை இச்சைகளை விலைமாதர்களிடம் தீர்த்துக் கொள்ள முனைவர். அவ்வாறு செய்ய ஒத்துக்கொள்ளும் பெண்ணிற்று வழக்கத்தை (₹ 1000-2000) விட அதிகளவு பணம் (₹ 5000 வரை) வழங்கப் படும். பெரும்பாலும், இவ்வாறு உறவு கொள்ளும்போது பெண்ணிற்கு வலி தெரியக் கூடாது என்பதற்காகப் போதை மருந்துகள் வழங்கப்படும் அல்லது மயக்க மருந்து அளிக்கப்படும். அந்நேரத்தில், வாடிக்கையாளர் ஆண் தன் இச்சைத் தீரும் வரை வக்கிரமான முறைகளில் புணர்ச்சியில் ஈடுபடுவது வழக்கம். போதை தெளிந்து எழும் பெண், தனக்கு என்ன நடந்தது எனத் தெரியாமல் ₹ 5000 பெற்றுக் கொள்வார். இங்குத் தான் இந்த வெள்ளைத் தோல் முகவர்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர். வாடிக்கையாளர் போர்வையில், இந்த வெள்ளைத் தோல் விலைமாதர் பெண்களிடம் அதிக விலைக் கொடுத்து அவர்களை மயக்கமுறச் செய்வர்.

அவர்கள் மயக்கமடைந்தவுடன், அவரது முதுகுப் பகுதியிலிருந்து வெள்ளைத் தோலை கிழித்து எடுத்துச் சென்று விடுவர். மயக்கம்/போதை தெளிந்து எழுந்தால் தான் இந்தப் பெண்களுக்குத் தான் பாதிப்பப் பட்டுள்ளோம் என்பதே தெரியும். பலபெண்கள் தன் வாடிக்கையாளர் காம்வெறியில் தன்னை கடித்ஹ்டு குதறியதாகவே நினைத்துக் கொள்வர். ஆனால், தன் தோல், பல லட்சத்திற்கு விற்கப் படுவது கூடத் தெரியாது.
இன்னும் சில இடங்களில், தெரிந்தே பாலியல் தொழிலாளிகளும் , ஏழைப் பெண்களும் தன் தோலை விற்று வருவதும் நடந்தேறி வருகின்றது.

குறிப்பாக நேபாளில் உள்ள கப்ரிபாலன் சவுக், நுவாகோட், சிந்துபால் சவுக் ஆகிய கிராமங்கள் உடல் உறுப்பு கடத்துவோர் தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஏழைகளை ஏமாற்றி கொள்ளை அடிக்கும் ஊற்றாய் மாறிவிட்டன.

இந்திய-நேபாள எல்லையில் பாதுகாப்புச் சோதனைகள் கடுமையாக இல்லாததாலும், 1800-கி.மீ. பரந்து விரிந்துள்ள எல்லை எளிதில் ஊடுருவக் கூடியதாய் உள்ளது, இந்தக் கடத்தல் காரர்களுக்கு எளிதாய் உள்ளது.

இந்திய-நேபாளஎல்லை

இந்திய-நேபாளஎல்லை
இந்திய-நேபாளஎல்லை

பெரும்பாலும், விபச்சாரம், சிறுநீரக  கொள்ளைக் கும்பலே தோல் வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். காத்மண்டுவிலிருந்து 50 கி.மீ . தூரத்தில் உள்ள காப்ரிபலன் சவுக் மாவட்டச் சிறையில் சுறுநீரகத் திருட்டு வழக்கில் தண்டனைக் கைதியாக இருக்கும் 40 வயதான பிரேம் பாஸ்கை கூறுகையில், “ இந்தியாவில் தோல் நிறத்தை மாற்றிக் கொள்ள விரும்பும் பணக்காரர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் தோலுக்கு நல்ல கிராக்கி உள்ளது. நியாயமான தோல் ஒரு 100 சதுர அங்குல துண்டு (1 அடி அகலம் 1 அடி நீளம்) தில்லி மற்றும் மும்பையில் ₹ 1,00,000 ரூபாயிலிருந்து ரூ .50,000 வரை விற்கப் படுகின்றது.

நேபாளத்தில் குக்கிராமங்களில் உள்ள ஏழை பெண்களையோ, விலைமாதர்களையோ மூளைச் சலவை செய்யும் முகவர்கள், இந்தப் பெண்களை இந்திய-நேபாள எல்லைவரை அழைத்துச் செல்வர். எல்லையிலிருந்து, மற்றொரு முகவர் இந்தியாவிற்கு இப்பெண்களை அழைத்துச் சென்று மற்றொரு முகவரிடம் ஒப்படைக்கின்றனர். மூன்றாவது முகவர் தோல் பிரித்தெடுக்கு ஏற்பாடு செய்வார். பெண்கள் தான் தோலை நன்கொடையாகத்தான் அளித்தேன், அதை விற்று இல்லையென ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும்” என்றார்.

லைஃப்செல் நிறுவனத்திடம் அல்லொடெர்ம் (Alloderm) திசு தயாரிப்புகுறித்த காப்புரிமை உள்ளது. இதனை மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடலில் வைத்துத் தைக்கப் பயன்படுத்துவர். ஆனால், தற்போது, செல்வந்தர்களின் பேராசைக் காரணமாக “முகத்தின் நிறத்தை மாற்றவும் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பயன்படுத்தப் படுகின்றது. அதனால், இந்நிறுவனத்தின் திசு வழித்தோன்றல் பொருட்களின் விற்பனை வளர்ச்சி ஆண்டுதோறும் 72% வரை அதிகரிக்கின்றது. மேலும், ஆண்டுதோறும் 41% வரை இலாபம் ஈட்டுகின்றது .

இதே போன்று சுமார் 13 நிறுவனங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளன. திசுக்களை இந்த நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. பெரும் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் இந்த நிறுவனங்களுக்கு, தோல் எவ்வாறு வெள்ளைத் தோல் உள்ள பெண்களிடமிருந்து பெறப்படுகின்றது என்பது குறித்த அக்கறை சிறிதும் இல்லை.

நேபாள அரசு நிர்வாகம், எவ்வளவு முயன்றாலும், இந்தத் தோல் திசு மாஃபியாவை கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம், பாதிக்கப் பட்ட யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை. ஒன்று, தரகர்கள் தங்கள் குடும்பத்தைக் கொலை செய்துவிடுவார்கள் எனும் பயம். மற்றொன்று, வறுமையில் வாழும் தங்களுக்கு, அவரச நேரத்தில், நமது தோலை விற்று பணம் சம்பாதிக்க அவசியம் ஏற்பட்டால், தரகர்களது உதவி தேவை என்பதாலும் மக்கள் புகாரளிக்க முனவருவதில்லை. இதுவரை 4 புகார்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
என நேபாள காவல் அதிகாரி தெரிவித்தார்.
அமெரிக்க உளவு நிறுவன்ங்களின் கண்களில் மண்ணைத் தூவும் இந்தத் தரகர்களால், இந்திய- நேபாள நிர்வாகத்தின் கண்னில் மண்ணைத் தூவுவது எளிதான காரியம்.

அரசுகள் ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிப் படுத்தாமல், மக்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்திவிட முடியாது. அது தோல் கடத்தலாகவோ, சிறுநீரகக் கடத்தலாகவோ, செம்மரக் கடத்தலாக இருந்தாலும் சரி. வறுமையை ஒழிக்காமல் தீர்வு என்பது கானல் நீர் தான்.

More articles

Latest article