நந்தியை வழிபட்டால் நல்ல உத்தியோகம்
nithyananda_swami_11-9-13-2வாரத்தின் ஏழு நாட்களும், வருடத்தின் 365 நாட்களுமே நந்தியைச் சென்று வழிபட்டு வருவதில் தவறில்லை. ஆனால் சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்ள, தடைகள் அகல வேண்டுமானால், பிரதோஷ நாளில் நந்தியை வழிபடுவது சிறந்தது.
நந்தியெம்பெருமானையும், உமாமகேஸ்வரரையும் எந்தக் கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால், என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்கள்.
குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் உணவுப்பற்றாக்குறை அகலும். உத்தியோக வாய்ப்பும் கிடைக்கும்.