லட்சுமி யோகம், கெளரி யோகம், சரஸ்வதி யோகம்

Must read

லட்சுமி யோகம், கெளரி யோகம், சரஸ்வதி யோகம்
முப்பெரும் தேவியரின் பெயரில் அமைந்துள்ள சிறப்பு யோகங்களான லட்சுமி யோகம், கெளரி யோகம், சரஸ்வதி யோகம் ஆகியவற்றை பார்ப்போம்.
லட்சுமி யோகம் ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் சுக்கிரன் கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் லட்சுமி யோகம் ஏற்படும். செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியை குறிக்கும் சுக்கிரகோளின் வலிமையை கொண்டு இந்த யோகம் விவரிக்கபடுகிறது.
பலன் நற்குணங்கள் உடையவராகவும்,அழகானவராகவும், புகழ் பெற்றவராகவும் இருப்பார், செல்வ நிலையில் உயர்வு தரும். கெளரி யோகம் சந்திரன் இலக்கினத்திற்கு கேந்திர,திரிகோணங்களி ல் ஆட்சி, உச்சம பெற்றிருக்க, குரு பார்த்தால் கெளரி யோகம் ஏற்படும். மனம், எண்ணத்தின் காரகனான சந்திரனின் வலிமை யை கொண்டு இந்த யோகம் விவரிக்கபடுகிறது.
godஒருவருக்கு உடல் வலிமையை விட மனோதைரியம் தேவை என்பதை விளக்குவதாக அன்னை சக்தி தேவியின் பெயரில் இந்த யோகம் அமைந்துள்ளது. பலன் நல்ல உடல்வாகுடையவர், நற்செயல்களை செய்பவர், நல்எண்ணம் ,மனோதைரியம் உடையவராக இருப்பர்.
சரஸ்வதி யோகம் நற் கோள்கள் சுக்கிரன், குரு, புதன் கேந்திர, திரிகோணங்களில் அல்லது இரண்டாம் பாவகத்தில் ஆட்சி , உச்சம் பெற்றால் சரஸ்வதி யோகம் ஏற்படும். ஒருவரின் வாக்குவன்மையை, பேச்சாற்றலை குறிக்கும் 2ம் பாவகத்தை கொண்டும், நற் கோள்களான புதன், குரு, சுக்கிரன் 2ம் பாவகத்தில் மற்றும் கேந்திர, திரிகோணங்களில் வலிமை பெறுவதை கொண்டு கல்வியின் அதிபதி அன்னை சரஸ்வதி தேவியின் பெயரில் இந்த யோகம் விளங்குகிறது.
பலன்
நுண்ணறிவாளர் , எழுத்தாளர், நாடகம், கதை, கவிதை ஆகியவற்றில் ஈடுபாடு அதிகம் ஏற்படும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் .
Source:http://astrokannan.com/

More articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article