விருதுகளை மத்திய அரசுக்கு திரும்ப அளிப்பேன் : பிரகாஷ் ராஜ்..

பெங்களூரு

பிரதமர் மோடி கவுரி லங்கேஷ் கொலையில் மவுனமாக இருப்பதை தொடர்ந்தால் விருதுகளை திருப்பி அளிக்கப் போவதாக பிரகாஷ் ராஜ் கூறி உள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு,  கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளில் புகழ் பெற்ற ஒரு நடிகர்.   மறைந்த இயக்குனர் கே.  பாலசந்தர் மூலமாக தமிழுக்கு அறிமுகமானவர்.   “செல்லம். ஐ லவ் யூ” என்னும் இவர் வசனம் ரசிகர்களிடையே பெரும் புகழைப் பெற்றது.   பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பிரகாஷ் ராஜ் உரை ஆற்றினார்.

அந்த உரையில், “கவுரி லங்கேஷ் கொலையை மோடியின் ஆதரவாளர்கள் பெருமளவில் கொண்டாடி வருவதாக தெரிகிறது.   அவர்களின் செயல்பாடுகள் பற்றி எந்த ஒரு கருத்தும் சொல்லாமல் மவுனமாக மோடி இருக்கிறார்.   என்னை எல்லோரும் சிறந்த நடிகர் என கூறுகிறீர்கள்.  என்னை விட மோடிதான் மிகச் சிறந்த நடிகர் என நிரூபித்துள்ளார்.  இனிமேலும் மோடி இந்த விஷயத்தில் மவுனமாக இருந்தால் என்னுடைய தேசிய விருதுகளை மத்திய அரசிடம் திருப்பி அளிக்க தயாராக உள்ளேன்” எனக் கூறி உள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Prakash raj said he will return his rewards to central govt
-=-