லக்னோ: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அமைப்பின் செயலாளராக இருப்பதற்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவிற்கு என்ன தகுதி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹ்லாத் மோடி.

பிசிசிஐ அமைப்பின் செயலாளராக பதவி வகிக்கிறார் ஜெய்ஷா. மேலும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இந்தப் பதவிகளை வகிக்க, இவருக்கு என்ன தகுதி என்ற கேள்விகள் எழுந்த நிலையில், அதுகுறித்து வெளிப்படையாகவே உடைத்துள்ளார் பிரஹ்லாத் மோடி.

“அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவிற்கு, பிசிசிஐ அமைப்பின் செயலாளராக பதவி வகிக்கும் அளவிற்கு எந்த பொருத்தமான தகுதியும் இல்லை. தகுதியின் அடிப்படையில் இல்லாமல், வெறுமனே செல்வாக்கின் அடிப்படையில் நடைபெறும் இத்தகைய செயல்களைக் கண்டு, எதற்காக நரேந்திர மோடி மெளனமாக இருக்கிறார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.

கடந்த காலங்களில், ஜெய்ஷா நடத்திவந்த நிறுவனம் அடைந்த அபரிமித பொருளாதார வளர்ச்சி குறித்து பல கேள்விகள் எழுந்தன. ஆனால், அவற்றுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.