டில்லி

நோய் பரவலைத் தடுக்கும் தடுப்பு மருந்துகள் தயாரிப்பு மற்றும் சோதனைகள் குறித்து இந்த பகுதியில் காண்போம்.

எந்த ஒரு நோய் பரவல் ஏற்பட்டாலும் அதற்கான தடுப்பு மருந்துகள் கண்டறியப்படும் பணிகள் தொடங்கப்படுகின்றன.  இதற்கான பணிகள் மற்றும் தயாரிப்பு குறித்த 2ஆம் பகுதியை இங்கு காண்போம்.

அனைத்து தடுப்பூசிகளும் பல்லாண்டு காலமாய் ஒவ்வொரு வருடமும் லட்சக் கணக்கானோருக்குப் போடப்பட்டு வருகிறது.  எனவே இந்த தடுப்பூசிகள் ஏராளமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவை பாதுகாப்பானவை என முழுவதும் நிரூபணம் ஆன பிறகே மக்களுக்கு அளிக்கப்படுகின்றன.  ஒவ்வொரு தடுப்பூசியும் கண்டுபிடிக்கபடட பிறகு குறைந்தது 3 கட்ட சோதனைகளுக்க்ட்படுத்தபடுகின்றன

முதல் கட்டம்

தடுப்பூசி பாதுகாப்பானதா எனத் தெரிந்து கொள்ளக் குறைந்த எண்ணிக்கையிலான ஆர்வலர்களுக்கு அளிக்கப்படுகிறது.   இதன் மூலம் தடுப்பூசி சரியான அளவில் எதிர்ப்புச் சக்தி உண்டாக்குகிறதா, பாதுகாப்பானதா எனச் சோதிக்கப்படுகிறது.  இதற்கு இளமையான வயது வந்த நல்ல உடல்நலத்துடன் கூடி9ய ஆர்வலர்கள் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இரண்டாம் கட்டம்

அதன் பிறகு மேலும் சில நூறு ஆர்வலர்களுக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுச் சோதிக்கப்படுகிறது.  இந்த கட்டத்தில் சோதிக்கப்படுவோர் ஒரே வயது மற்றும் பாலினத்தைச் சேர்ந்தவர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர்.  இந்த கட்டத்தில் பலவித சோதனைகள்: நடத்தி ஒவ்வொரு வயதுக்காரர்களுக்கும் ஏற்படும் விளைவுகள் கண்டறியப்படுகின்றன.  இந்த சோதனை முடிவுகள் கணினியில் பதியப்பட்டு நபருக்கு நபர் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகின்றன.

மூன்றாம் கட்டம்

இந்த கட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆர்வலர்களுக்கு மருந்து செலுத்தப்படுகிறது.  இவர்கள் அனைவரும் ஏற்கனவே இதே வகை தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளாதவர்களாகவும் விதம் விதமான வயது குழுவினராகவும் தேர்வு செய்யப்படுகின்றனர்.  மேலும் இரு பாலினத்தவரும் அனைத்துக் குழுவிலும் இடம் பெற்று தனித்தனியாகக் கண்காணிக்கப்படுவார்கள்.  பொதுவாக மூன்றாம் கட்ட சோதனைகள் பல் நாடுகளில் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகின்றன.

இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனையில் பங்கு பெறும் ஆர்வலர்கள் இடம் காணப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு, உள்ளிட்டவை அளவிடப்படுகின்றன.   இதில் ஒரு சிலருக்கு மட்டும் தடுப்பூசி அளிக்கப்பட்டு ஒரு சிலருக்கு அளிக்கப்படுவதில்லை.  மேலும் இது குறித்து ஆர்வலர்களிடம் தெரிவிக்காமலே அவர்களை தனித்தனியே விஞ்ஞானிகள் சோதிக்கின்றனர்.

இந்த சோதனைகள் முடிந்த  பிறகு ஆர்வலர்களிடம் காணப்படும் முடிவுகளைப் பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படுகின்றன.   இந்த முடிவுகள் அனைத்தும் கிடைத்த பிறகு ,முடிவுகள் படிப்படியாக ஆய்வு செய்யப்படுகின்றன.  இந்த சோதனை விவரங்களின் அடிப்படையில் அரசு விஞ்ஞானிகள் ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவுசெய்கின்றனர்.

இந்த தடுப்பூசிகள் அறிமுகம் ஆன பிறகும் ஆய்வுகள் தொடர்கின்றன.  அத்துடன் இந்த தடுப்பூசிகளின் பாதுகாப்பு, மற்றும் திறன் குறித்து அடிக்கடி ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.  இதன் மூலம் விஞ்ஞானிகளால் தடுப்பூசிகள் நிலை குறித்து உடனடியாக தெரிந்து கொள்ள முடிகிறது.  அத்துடன் இந்த தடுப்பூசிகள் அளிப்பதை மேலும் தொடர்வது குறித்தும்  அல்லது நிறுத்துவது குறித்தும் முடிவுகள் எடுக்க வகை செய்யப்படுகிறது.