வசைமாறி பொழிந்து பா.ஜ.க.பெண் எம்.பி.க்கு போனில் மிரட்டல்.

Must read

வசைமாறி பொழிந்து பா.ஜ.க.பெண் எம்.பி.க்கு போனில் மிரட்டல்.

சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருபவர், பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர்.

கடந்த மக்களவை தேர்தலில் மத்தியப்பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

‘’கொரோனாவில் இருந்து விடுபடவேண்டும் என்றால் ஒவ்வொருவரும் வீட்டில் தினமும் 5 முறை அனுமன் ஸ்லோகம் சொல்ல வேண்டும்’’ என இரு தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார்..

இந்த நிலையில் அவருக்கு, சம்மந்தமில்லாத செல்போன் எண்களில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

அவரை வசைமாறிப் பொழிந்து, அச்சுறுத்தும் வகையில் மர்ம ஆசாமி பேசியுள்ளான்

இது குறித்து போபாலில் உள்ள கமலாநகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

’’அனுமனைப் புகழ்ந்து பாடல் பாடச்சொன்னதாலும், ராமர் கோயில் கட்ட ஆதரவு அளித்ததாலும் என்னை போனில் தொடர்பு கொண்டு அவதூறாக யாரோ திட்டினர்.’’ என்று பெண் சாமியார் பிரக்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

‘’என்னை மட்டுமல்லாது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமீத்ஷா ஆகியோரையும் போன் ஆசாமி மிரட்டினான்’’ என்றும் அவர் புகார் கூறினார்.

-பா.பாரதி.

More articles

Latest article