போபால்

பாஜக வெளியிட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண் சாமியார் பிரக்யா தாக்கூர் பெயர் இடம் பெறவில்லை. 

பெண் சாமியாரான பிரக்யா தாக்கூர் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இருந்து நாடாளுமன்றத்துக்கு பாஜக சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஆவார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பிரக்யா மகாத்மா காந்தி குறித்து இவர் கூறிய கருத்துகள் எதிர்க்கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

எனவே கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான பா.ஜனதா முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பெண் சாமியார் பிரக்யா தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவரது சர்ச்சை கருத்துகள்தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தனக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பிரக்யா தாக்கூர் கூறுகையில், தேர்தல் வாய்ப்பு குறித்து கட்சியும், பிரதமர் மோடியும் மறு பரிசீலனை செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் இந்தியாவை இந்து நாடாக உருவாக்கத் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.