கர்தாலா

ம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த திரிபுரா முதல்வர் தமது சுதந்திர தின செய்தியை மாற்றி அமைத்தால் தான் ஒப்புக்கொள்ளப்படும் என தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ கட்டுப்பாடு விதித்ததாக தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர், மற்றும் அனைத்து மாநில முதல்வர்களும் தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ மூலம் வாழ்த்துச் செய்தி அளிப்பது வழக்கம்.   அது போல திரிபுரா முதல்வர் மணிக் சர்க்கார் உரை நிகழ்த்தியதை தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய ரேடியோவை நிர்வகிக்கும், பிரசார் பாரதி பதிவு செய்துள்ளது.

அதன் பிறகு முதல்வருக்கு பிரசார் பாரதி ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.  அதில், “முதல்வர் மணிக் சர்க்காரின் சுதந்திர தின செய்தி அறிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டது.   இந்த சுதந்திர தினத்தின் மேன்மையையும், செய்தி வெளியிடும் வழிமுறைகளை முன்னிட்டும், அந்த செய்தியை அப்படியே வெளியிட முடியாத நிலையில் உள்ளேன்.   முதல்வர் அவரது செய்தி அறிக்கையை மாற்றி அமைத்தால் வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதை வெளியிட்ட முதல்வர், தமது செய்தி அறிக்கையில் தவறாக எதுவும் குறிப்பிடவில்லை எனவும், அதனால் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி உள்ளார்.

இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ, “மோடி அரசு தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ அரசு நிறுவனம் என்பதையும் அவர்களின் கட்சி நிறுவனம் அல்ல என்பதை முதலில் நினைவில் கொள்ள வேண்டும்.   சுதந்திர தினத்துக்கு வாழ்த்து செய்தி அறிக்கை அளிப்பது முதல்வரின் கடமை.   அதையும் மத்திய அரசின் விருப்பபடிதான் வழங்க வேண்டும் என்பது பழைய அவசரநிலை காலத்தில் நடப்பது போல உள்ளது.   ஒரு மாநில முதல்வருக்கும் அவர் விருப்பம் போல வாழ்த்து செய்தி அளிப்பதையும் இந்த மத்திய அரசு கட்டுப்படுத்துவது தவறானது” எனக் கூறி உள்ளது.

கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் எச்சூரி, “தூர்தர்ஷன் என்பது பா ஜ க வுக்கோ அல்லது ஆர் எஸ் எஸ் க்கோ சொந்தமானது அல்ல.  திரிபுரா முதல்வரின் சுதந்திர தின செய்தி அறிக்கையை வெளியிட மறுப்பது சட்ட விரோதமானது மட்டும் அல்ல, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும் என கூறி உள்ளார்.