‘விஷால் 32’ மீண்டும் விஷாலுடன் இணையும் இளையதிலகம்….!

Must read

ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் எனிமி திரைப்படம் வருகிற அக்டோபர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தொடர்ந்து விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்நிலையில் விஷால் 32 திரைப்படத்தை தொடங்கினார் நடிகர் விஷால்.

ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கும் விஷால் 32 திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார். விஷால் 32 படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்குகிறார். பிரபல இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்க பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் படபிடிப்பில் இளையதிலகம் பிரபு இணைந்துள்ளார். முன்னதாக விஷாலுடன் தாமிரபரணி, ஆம்பள உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த இளைய திலகம் பிரபு அவர்கள் மீண்டும் விஷால் 32 படத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article