‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டார்லிங் பாடல் வீடியோ….!

Must read

‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனனுடன் கைகோர்த்துள்ளார் சிம்பு .

இப்படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ எனப் பெயரிட்டு பின் ‘வெந்து தணிந்தது காடு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பாடலாசிரியராக தாமரை பணிபுரிந்து வந்தார். நடிகை ராதிகா, இப்படத்தில் சிம்புவின் தாயாராக நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை கயாடு லோகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் டார்லிங் எனும் புதிய பாடல் வீடியோ ஒன்றை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வெளியிட்டுள்ளார். இந்த பாடலில் நடிகைகள் ரேவதி மற்றும் பிரயாகா மார்டின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம்-ன் அழகான ஒளிப்பதிவில் பாடகர் கார்த்திக் இசை அமைத்திருக்கும் டார்லிங் பாடலை கவிஞர் கார்க்கி எழுத பாடகர் கிருஷ்ணா பாடியுள்ளார்.

More articles

Latest article