பிரபுதேவா-நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகும் ‘சார்லி சாப்ளின்-2’

 

பிரபுதேவா நடிப்பில் கடந்த 2002-ம்  ஆண்டு  வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘சார்லி சாப்ளின்’.  இதில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக அபிராமி, மோனல் நடித்திருந்தனர். மேலும், பிரபு,  காயத்ரி ரகுராம், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை படமாக இது உருவாகியிருந்தது.

இந்தியில் சல்மான்கான் நடிப்பில் ‘நோ எண்ட்ரி’, தெலுங்கில்  ‘பெல்லம்   ஊர்  எல்தே’  மலையாளத்தில்  ஜெயராம்,  பாவனா  நடிப்பில்  ‘ஹேப்பி  ஹஸ்பெண்ட்ஸ்’,  கன்னடத்தில்  ரமேஷ்  அரவிந்த்  நடிப்பில்  ‘அல்லா  புல்லா  சுல்லா’  என்று ரீமேக் ஆனது. மேலும்  போஜ்பூரி,  ஒரியா,  மராத்தி  ஆகிய  இந்திய  மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிபெற்றது.

ஷக்தி சிதம்பரம்

தற்போது இதன்  இரண்டாம் பாகம் உருவாகிறது. முன்னணி பட  தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் சிவா தயாரிக்கிறார்.

‘சார்லி சாப்ளின்’ முதல் பாகத்தில் நாயகனாக நடித்த பிரபுதேவாவே   இரண்டாம்  பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக  நிக்கி  கல்ராணி,  அதா ஷர்மா ஆகியோர் நடிக்கிறார்கள்.

‘சார்லி சாப்ளின்’  முதல்  பாகத்தை  இயக்கிய  இயக்குநர் ஷக்தி  சிதம்பரமே, இந்த இரண்டாம்  பாகத்தையும் இயக்குகிறார்.

“எனது படம் என்றாலே கமர்ஷியலாக இருக்கும், காமெடி தூக்கலாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக இந்த படமும் அமையும்” என்ற இயக்குநர் ஷக்தி  சிதம்பரம்  கூறுகிறார்.

மேலும், “பிரபு தேவா -நிக்கி கல்ராணி  இருவருக்கும் திருப்பதியில்  திருமணம் நடக்க முடிவு செய்கிறார்கள்.  அதற்காக  இருவரது  குடும்பமும் திருப்பதிக்கு செல்கிறார்கள். அங்கு செல்லும்போதும்,   அங்கு  போய்  சேர்ந்த  பிறகும்  நடக்கும் சம்பவங்களின் கலகலப்பான தொகுப்புதான இந்த ‘சார்லி சாப்ளின்-2’ படம். ‘திருப்பதிக்கு போனால்  திருப்பம் வரும்’ என்பார்கள்.  அது  என்ன  திருப்பம்  என்பதுதான் படத்தின்  சஸ்பென்ஸ்..” என்றார்.
English Summary
Prabhu Deva-Nikki Galrani are  performance charlie chaplin 2