லக்னோ:

உ.பி.,யில் ரூ. 4லட்சம் மின் கட்டண பாக்கி வைத்துள்ளதாகவும் மின் திருட்டில் ஈடுபட்டதாகவும் கூறி, சமாஜ்வாதி கட்சி தலைவர் முலயாம் சிங் வீட்டில் மின்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முலாயம்சிங் யாதவின் லக்னோ வீட்டில் மின் துறை அதிகாரிகள் இன்று திடீரென நுழைந்து ஆய்வு செய்தனர்.
.
இது குறித்து மின் துறை அதிகாரி ஒருவர், “வி.ஐ.பி.களுக்கு அரசு 5 கிலோவாட் மின்சாரம் அனுமதிஅளித்துள்ளது. ஆனால் கடந்த ஆட்சியில் முலாயம்சிங்கிற்கு 8 மடங்கு அதிகமாக 40 கிலேவாட் மின்சாரம் வழங்கி அனுமதியளித்துள்ளனர். இதன் அடிப்படையில் கணக்கிட்டால் முலாயம், மின்கட்டணமாக
ரூ. 4 லட்சம் பாக்கி வைத்துள்ளார்” என்றார்.

சமாஜ்வாதி கட்சியினர், “சமீபத்தில் உபி யில் வெற்றிபெற்ற பாஜக அரசு, காழ்ப்புணர்வோடு இச் சோதனையை நடத்தியிருக்கிறது. குறிப்பிட்ட வீட்டின் மின்கட்டணம் இம்மாதம் வரை பாக்கியின்றி” என்று குற்றம்சாட்டுகின்றனர்.