மோசடி வழக்கில் பா.ஜ.க. பவர் ஸ்டார் மீண்டும் கைது!

சென்னை,

ண மோசடி வழக்கில் பிரபல காமெடி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழக பா.ஜ.க உறுப்பினராகவும் இருக்கிறார்.

பெங்களூரு தொழிலதிபர்களை ரூ.30 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 கோடி கமிஷன் பெற்று  ஏமாற்றிய வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.

தமிழ் திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் பவர் ஸ்டார் சீனிவாசன். லத்திகா, கண்ணா லட்டு திங்க ஆசையா போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகர் மட்டுமல்லாது வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன்  வாங்கிக் கொடுக்கும் புரோக்கர் தொழிலும் செய்து வருகிறார்.

ஏற்கனவே,  கடந்த 2013 ஆம் ஆண்டு டில்லியை சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளருக்கு ரூ.1000 கோடி கடன் பெற்று தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் டில்லி போலீசார் சீனிவாசனை கைது செய்தனர்.

இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்துள்ள சீனிவாசனை கர்நாடக போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மசூர் அலாம் மற்றும் அவரது சகோதரர் சஜ்ஜாத் வஹாப் ஆகியோருக்கு கடன் வாங்கி தருவதாக  சீனிவாசன் ஏமாற்றி மோடி செய்ததாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் பெங்களூரு போலீசார்  சீனிவாசனை கைது செய்து, பெங்களூரு அழைத்து சென்றுள்ளனர்.


English Summary
Power Star Srinivasan again arrested in money laundering case