சென்னையின் பல பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு! முழு விவரம்…

Must read

சென்னை:  சென்னையில் நாளை  பல பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக மின்தடை  செய்யப்படும் என தமிழக மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருவதால், கடந்த பல மாதங்களாக  பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்படாத நிலையில், சென்னையில் நாளை முதல் அந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

சென்னையில் 19.06.2021 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்  மதியம் 01.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பட்டாபிராம் பகுதி: ராஜிவ்காந்தி நகர், லட்சுமி நகர், பாலாஜி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

திருமுல்லைவாயில் பகுதி: லட்சுமிபுரம் கோனிமேடு, காந்திநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

மணலி புதுநகர் பகுதி: மணலி நியூ டவுன், கே.ஜி.எல் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

மேலூர் பகுதி : பட்டமந்திரி, வள்ளுர், அத்திப்பட்டு

அடையார் பெசன்ட் மற்றும் அடையார் சாஸ்திரி நகர் பகுதி: டி.எம்.எம். தெரு, அண்ணா காலனி, வண்னன்துரை, எம்.ஜி ரோடு, லட்சுமிபுரம்,

வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி: 100 அடி சாலை, லட்சுமி நகர், எம்.ஜி.ஆர். நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்

வேளச்சேரி கிழக்கு பகுதி: டான்சி நகர், அண்ணா நகர், அண்ணா நகர் விரிவு, அன்னை இந்திரா நகர், VGP செல்வா நகர் மற்றும் விரிவு, பாலமுருகன் நகர், வீணஸ் காலனி

ஐ.டி காரிடர் பகுதி: ஈ.டி.எல். பகுதி, சோளிங்கநல்லூர் பகுதி, தரமணி பகுதி, துரைப்பாக்கம் பகுதி, எழில் நகர் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.<br

புழல் பகுதி: வள்ளுவர் நகர், பாரதிதாசன் நகர் மற்றும் சுற்றியுள்ளபகுதிகள்.

ஸ்டான்லி பகுதி: அம்பேத்கார் நகர், ஸ்டான்லி நகர், ஜெயராம் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

சைதாப்பேட்டை பகுதி: ரெங்கராஜாபுரம், தாமஸ் நகர், காக்கன்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் பகுதி: கெருகம்பாக்கம், போரூர், காரம்பாக்கம், மாங்காடு, குன்றத்துhர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

நீலாங்கரை பகுதி: ப்ளு பீச் ரோடு, சீ வியுவ் அவென்யூ, கேசுரினாடிரைவ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

பாலவாக்கம் பகுதி: சின்ன நீலாங்கரிகுப்பம், ரங்கரெட்டிகார்டன், மேட்டு காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

கிண்டி பகுதி: மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், டி.ஜி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

கே நகர் பகுதி: அசோக் நகர், கே.கே நகர், வடபழனி, அழகிரி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

அம்பத்தூர் பகுதி:  புளியம்பேடு, தேவிநகர், சூசைநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

More articles

Latest article