தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தமிழகத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இந்த நேரத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சார்பில் இலவசமாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருகிறோம் என்று நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதில் ஏப்ரல் மாத கடைசி முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது.

நீதிமன்றம் அளித்த காலக்கெடு இந்த மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்ததை ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது