கொழும்பு

ந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே எரிசக்தி உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

Sri Lanka and India Flags Crossed And Waving Flat Style. Official Proportion. Correct Colors.

.

நேற்று இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை உருவாக்குவது தொடர்பாக இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள்  இந்திய அரசின் நிதி உதவியுடன் இலங்கையின் நெடுந்தீவு, அனலைத்தீவு மற்றும் நைனாத்தீவு ஆகிய இடங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை உருவாக்க இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக இலங்கை அமைச்சர் காஞ்சன விஜயசேகரா தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யூ-சோலார் கிளீன் எனர்ஜி நிறுவனம் ழ் 530 கிலோ வாட் காற்றாலை மின்சாரம், 1,700 கிலோ வாட் சூரியசக்தி உள்ளிட்ட எரிசக்தி அமைப்புகளை உருவாக்க உள்ளது.

ஏற்கனவே சீனாவுடன் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், சீன அரசு வெளியேறிய பிறகு இந்தியாவுடனான இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.