வாடிகன் சிட்டி: ஹமாஸ் பயங்கரவாதிகளை கடுமையாக வேட்டையாடும் இஸ்ரேல் தாக்குதலில் பல பகுதிகளில் கடும் சேதமடைந்து மக்கள் அல்லல் பட்டு வருகின்றனர். இதனால் வேனையுற்ற போப் பிரான்சிஸ், போதும் தயவு செய்து போரை நிறுத்துங்கள் என இரு தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ்  இடையே கடந்த சில மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடு உடைகளை இழந்து அல்லப்பட்டு வருகின்றன. இந்த போதை நிறுத்த உலக நாடுகள் முயற்றும் போரை நிறுத்த இஸ்ரேல் மறுத்து வருகிறது,

இந்த நிலையில், போரை நிறுத்த போப் பிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார்.  போப் பிரான்சிஸ் வயது முதிர்வு  காரணமாக  மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவரது உடல்நலம் தேறிய நிலையில்,  பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் பேசிய போப் பிரான்சிஸ், இஸ்ரேஸ் ஹமாஸ் போர் முடிவு குறித்து தனது வேதனையை தெரிவித்தார்.  “இஸ்ரேல் – பாலஸ்தீனம் விவகாரத்தில் தினந்தோரம் பொதுமக்கள் பாதிக்கப்படுவது, ஆயிரக்ணக்கானோர் உயிரிழப்பது, படுகாயமடைவது, அகதியாவது உள்ளிட்டவை என் மனதை வேதனையில் ஆழ்த்துகிறது.”  “இப்படி செய்வதை வைத்து சிறப்பான உலகை கட்டமைக்க முடியும் என நினைக்கின்றீர்களா? உண்மையில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று நினைக்கின்றீர்களா? போதும்! எல்லோரும் சொல்வோம் போதும்! நிறுத்துங்கள்!” என்று தெரிவித்தார்.

அதாவது,  உண்மையில் நீங்கள் இந்த வழியில் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் உண்மையிலேயே அமைதியை அடைவீர்கள் என்று நினைக்கிறீர்களா? போதும் ப்ளீஸ்! நாங்கள் அனைவரும் போதும் என்று சொல்லட்டும்! நிறுத்துங்கள்!” “ஒவ்வொரு நாளும் நான் பாலஸ்தீனத்திலும் இஸ்ரேலிலும் நடந்து வரும் பகைமையால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் என்று வேதனையுடன் என் இதயத்தில் சுமக்கிறேன்,” என்று பிரான்சிஸ் ரோமில் ஏஞ்சலஸ் பிரார்த்தனையில் தெளிவான குரலில் பேசினார்.