சென்னையில் நேற்று இரவு… பவர் கட்டும், பணக்கட்டும்

Must read

a
சென்னையில் நேற்று இரவு முதல் இப்போது வரை பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பெரும்பாலான இடங்களில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேர்தல் நெருக்கத்தில் மின்வெட்டை ஏற்படுத்தி ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதாக வழக்கமாக புகார ஏற்படுவது உண்டு. இன்று நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டியும் அப்படி புகார் எழுந்தது. கடந்த பல நாட்களாக சென்னையின் பல பகுதிகளில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டது. அப்போதெல்லாம் பண விநியோகம் நடந்ததாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னையில் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது. வெயில் காலம் என்பதால் இரவிலும் வெட்கை அதிகமாக இருந்தது. வயதானவர்கள், குழந்தைகள் தூக்கமின்றி அவதியுற்றனர்.
இதற்கிடையே, தேர்தலுக்கு முதல் நாளான நேற்று இரவு முழுதும் பல இடங்களில் பணப்பட்டுவாடா நடந்ததாக புகார் எழுந்துள்ளது. ஆளுங்கட்சி மட்டுமின்றி வேறு சில கட்சிகளும் பண விநியோகம் செய்யததாக சொல்லப்படுகிறது.
கடந்த சில நாட்களாக மின்வெட்டு இருந்ததை அடத்து, தேர்தல் ஆணையம், “இனி மின்வெட்டு நடந்தால் மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article