தில்லி உல்லாஸ் நகரில் வசிக்கும் ஒரு மாற்றுத்திறனாளி முதல் முயற்சியில் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றுள்ளார்.
IAS PRANJAL PATELமாற்றுத்திறனாளி பிரஞ்சுல் பாடில் தம்முடைய ஆறு வயதில் கண்பார்வையை இழந்தவர்.
ஆனால் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர் ஐ.ஏ.எஸ் ஆவதை தன் லட்சியமாய்க் கொண்டிருந்து உழைத்து வந்தார். கடினமான நாட்களை தன்னம்பிக்கையுடன் கடந்து தில்லியில் உள்ள ஏ.எல்.எஸ் அகாடமியில் பயிற்சி பெற்று இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
 

பாட்டில் அரசியல் பாடத்தை இளநிலைக் பட்டத்தை மும்பையில் உள்ள சேவியர் கல்லூரியிலும், சர்வதேச உறவுகள் பாடத்தில் முதுநிலைப் பட்டத்தை ஜே.என்.யூ பல்கலைகழகத்திலும் பயின்றவர். தொழிற்நுட்பம் அவருக்கு மிகுந்த உதவியாய் இருந்ததை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். எழுத்துக்களை ஒலியாய் வாசிக்கும் மென்பொருளை  தன் கணினியில் பதிவிறக்கி படிக்க பயன்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.


யூ.பி.எஸ்.சி. தனக்கு எந்தப் பதவியை வழங்கினாலும் அதனை திறம்பட எதிர்கொள்ள காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவரது சாதனை நிச்சயம் பலரை சாதிக்கத் தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
பிரஞ்சால் பாடில் அவர்களின்  பணி சிறக்க பத்திரிக்கை.காமின் வாழ்த்துக்கள்.