பிரேசில்:
பிரேசிலில்,கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தோல்வி அடைந்து விட்டதாக கூறி ரியோ-டி-ஜெனிரோ உள்ளிட்ட பல நகரங்களில் பாத்திரங்களை தட்டி சத்தம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று மட்டும் பிரேசிலில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதுவரை அங்கு 5 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த இயலாத அதிபர் ஜெய்ர் போல்சனாரோ என குற்றஞ்சாட்டி அவரை பதவி விலக வலியுறுத்தி வீதிகளில் திரண்ட மக்கள் பாத்திரங்களை தட்டி சப்தம் எழுப்பிய படி போராட்டம் நடத்தினர்.