சென்னை: கனமழை காரணமாக  ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளன.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பெய்து வருகிறது. மிக்ஜாம் புயல் மற்றும் அதை தொடர்ந்த தென் மாவட்டங்களில் பெய்த  அதி கனமழை  காரணமாக, பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. அதுபோல,  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகளும்  ஒத்திவைக்கப்பட்டன . சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள உறுப்பு கல்லூரிகளில் நேற்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன என்பதும், தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

.இந்த நிலையில் மழையால் ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள்,  வரும்  11ம் தேதி நடைபெறும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல்  அறிவித்து உள்ளார்.