மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 15 நாட்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், கடன் தவணைகளை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவையுங்கள் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இது அடுத்த அடுத்த 15 நாட்களில்  இருமடங்காகும் என்றும் மாத இறுதியில்   1.19 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கிறது, தற்போதைய நிவைலயில், 5,64,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தொற்று காரணமாக மாநிலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், மருத்துவ ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இது  ஏப்ரல் மாத இறுதிக்குள் ஒரு நாளைக்கு 2,000 மெட்ரிக் டன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து,  அண்டை மாநிலங்களிலிருந்து திரவ மருத்துவ ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதில் உள்ள தடைகளை சுட்டிக்காட்டி, நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள எஃகு ஆலைகளில் இருந்து ஆக்ஸிஜனை விமானத்தில் கொண்டு செல்ல தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தாக்கரே அனுமதி கோரினார்.

இதுதொடர்பாக, மருத்துவ ஆக்ஸிஜனின் பற்றாக்குறை இருப்பதாகவும், விமானப்படை விமானங்களைப் பயன்படுத்தி மாநிலத்தில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இதை வழங்க மையம் உதவ வேண்டும் என்றும் தாக்கரே அதற்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் குஜராத்தில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனமும் இலவசமாக ஆக்சிஜன் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக மக்களின் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், கடன் தவணைகள் திருப்பி செலுத்துவதை நிறுத்தி வையுங்கள் என மத்தியஅரசுக்கு முதல்வர் உத்தவ்தாக்கரே கடிதம் எழுதி உள்ளார். அதில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிலுவையில் உள்ள சிறு, நடுத்தர மற்றும் பிற வணிக நிறுவனங்களின் கடன் தவணைகளை திருப்பிச் செலுத்துவதை  ஒத்தி வைக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக வங்கிகள் , நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்படி கோரிக்கை வைத்துள்ளார்.