சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கடந்த 2 நாட்களாக தமிழக அரசியல் கட்சிகள்,அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த முதியோர்களின் தபால் வாக்கு குறித்தும், தேர்தல் வாக்குப்பதிவு கூடுதலாக ஒருமணி நேரம் வாங்கப்படம், மற்றும் வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய தலமை தேர்தல் ஆணையர், தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் காலம் வருகின்ற மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். அதுபோல, தேர்தல் பார்வையாளர்களாக பிற மாநில அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதுமட்டுமின்றி, 80 வயதிற்கு மேற்பட்டோர் தபால் வாக்களிப்பதில் அரசியல் கட்சிகளிடையே மாற்றுக் கருத்துகள் உள்ளன, வாக்குப்பதிவு முடிந்த 2 நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தவும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. அதனால், தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்படும் என்றவர், கூடுதலாக 25000 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக மாநிலத்தில் மொத்தம் 93,000 வாக்குச் சாவடிகள் இருக்கும். அதுபோல, வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும்.
வழக்கமாக தமிழகத்தில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகமாகவே இருக்கும் என்றவர், இந்த முறை வாக்கு பதிவு சதவிகிதத்தை அமைதியான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும், புதிய வாக்காளர்கள் அனைவரும் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும், வாக்காளர்கள் எவ்வித தயக்கமும் இன்றி வாக்குச்சாவடிக்கு வர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்றவர், கொரோனா மிக அதிகமாக இருந்த சூழலில் பீகாரில் தேர்தலை நடத்திக் காட்டியதுடன், பீகாரில் நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்தி தேர்தல் ஆணையத்தின் திறனை நிரூபித்தோம் என்றவர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி மீண்ட அடுத்த நாளே பீகாரில் தேர்தல் அதிகாரிகள் பணிக்கு திரும்பினர் .
தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வலியுறுத்தி இருப்பதுடன், வாக்குப்பதிவு முடிந்த ஒன்று அல்லது 2 நாட்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்தவும் அரசியல் கட்சியினர் கேட்டுக் கொண்டனர். ஆனால், கேரளா, மேற்குவங்கம் மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது – எனவே வாக்கு எண்ணிக்கையை தமிழகத்தில் உடனடியாக நடத்துவது குறித்து முடிவெடுக்க இயலாது என்று கூறினார்.
வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் வழங்குவதை தடுக்க சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தின, அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை – வாக்குறுதி அளிக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க முடியாது. தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் கொடுப்பதை தடுப்பது சவாலானது என்றவர்,
அதுபோல, சில அரசியல் கட்சிகள் மறுபடியும் வாக்குப் பெட்டி முறைக்கு மாற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால், வாக்குச்சீட்டு முறைக்கு மாற வாய்ப்பு இல்லை என்று மறுத்தார்.
80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு அளிக்கும் வாய்ப்பு வழங்கப்படுவது என்பது தமிழகத்திற்கான ஏற்பாடு மட்டும் அல்ல என்று தமிழக அரசியல் கட்சிகளின் போரிக்கை நிராகரித்தவர், 80 வயதுக்கு மேற்பட்டவர்களை வாக்குச் சாவடிகளுக்கு கட்டாயம் வரவேண்டும் என்று கூறுவது நியாயமற்றது, அது அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்றார். முதியோர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் முறை தொடரும் என்றார்.
கொரோனா தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதால் வாக்குப்பதிவு நேரம் 1 மணி நேரம் நீட்டிக்கப்படுவதாக கூறியவர், தமிழகத்தில் சுமார் 68ஆயிரம் வாக்குப் பதிவு மையங்கள் இருந்த நிலையில், அவை, 93 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றார். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின் போது வீடியோ பதிவு செய்யப்படும் என்றவர், மின்னணு இயந்திரம் வைக்கப்படும் அறையில் உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று உறுதி கூறினார்.
வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிமுறைகள் தொடர்பாக தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் 2 மூத்த தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள், மேலும், வாக்காளர்களுக்கு பணப்பட் டுவாடாவை தடுக்க தேர்தல் செலவின பார்வையாளர்கள் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள் என்றதுடன், தமிழகத்தில் பாதுகாப்பு பணிக்கு முழு அளவில் மாநில போலீசார் பயன்படுத்தப்படுவர் – தேவைக்கு ஏற்ப மத்திய படைகள் பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.
தமிழகத்தில், விழாக்காலம், மாணவர்களுக்கான தேர்வு போன்றவை குறித்து ஆய்வு செய்து, அதன்பிறகே தேர்தல் தேதி இறுதி செய்யப்படும என்றவர், தேர்தல் தேதி தொடர்பாக அரசியல் கட்சிகள் பல்வேறு விருப்பங்களை தெரிவித்துள்ளன அவை குறித்தும் பரிசீலிப்போம் என்றார்.
ஏற்கனவே பணப்பட்டுவாடா உள்பட பல்வேறு புகார்கள் காரணமாக, தமிழகத்தில் ஆர்.கே.நகர் தேர்தல் 2 முறை ரத்து செய்யப்பட்டது, வேலூரிலும் ஒரு முறை தேர்தலை ரத்து செய்துள்ளோம் என்றவர், பணப்புழக்கம், பணப்பட்டுவாடா போன்ற காரணங்களால் தேர்தல் ரத்து செய்யப்படுவது என்பது மிகவும் உச்சபட்ச நடவடிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.