சென்னை: சென்னை மதுரைவாயல் அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் கட்சித்  தலைவா் கமல்ஹாசன் தலைமையில்  இன்று காலை 10 மணிக்குதொடங்கி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 500-க்கும் மேற்ப்பட்ட உறுப்பினா்கள் பங்கேற்ற நிலையில், இந்தி சமஸ்கிருதம் மொழிகளை திணிக்க முயற்சிக்கும் பாஜக அரசுக்கு வன்மையாக கண்டனம், பொள்ளாட்சி வழக்கின் விசாரணை விரைந்து நடத்தப்பட வேண்டும், இறந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை. கிராம சபை கூட்டம் நடத்தப்படாமல் இருப்பதை கண்டித்தும், எட்டு வழி சாலை போன்ற விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது.  இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும் என்றார்.

மேலும்,  தேர்தல் கூட்டணி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கமல்ஹாசனுக்கு வழங்கி, மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கட்சி தொடர்பான தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் உள்ளிட்ட அனைத்து முடிவையும் எடுக்க தலைவர் கமல்ஹாசனுக்கு பொதுக்குழு அங்கீகாரம் அளித்துள்ளது.

தீர்மானம் விவரம்: