சென்னை:
ந்துக்களின் புனிதமான கங்கை நீர் தற்போது தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
வாழ்க்கையில் ஒருமுறையாவது காசிக்கு சென்று கங்கையில் நீராட வேண்டும் என்பது பெரும்பாலான இந்துக்களின் கனவு. கங்கையில் குளித்தால் பாவம் தொலையும் என்பது ஐதிகம். ஆனால் எல்லோராலும் அவ்வளவு தூரம் சென்று வர இயலாது. அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு  கங்கை நீரை நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய தொடங்கி உள்ளது.

கங்கை தண்ணீர் பாட்டில்
               கங்கை தண்ணீர் பாட்டில்

இன்றுமுதல் விற்பனைக்கு வந்துள்ள கங்கை நீர் அரை லிட்டர், 200 மிலி அளவுகளில் கிடைக்கிறது. அதேபோல் ரிஷிகேஷ் தண்ணீரும் விற்பனைக்கு வந்துள்ளது. சென்னையில் தலைமை தபால் நிலையமான அண்ணாசாலை, ஜார்ஜ் டவுன் ஆகிய இரண்டில் மட்டுமே தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தபால்நிலைய அதிகாரி: இன்று விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து பாட்டில்களும் விற்றுவிட்டன, பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வாங்கி சென்றதாக கூறினார்.
தமிழ்நாட்டில்  திருச்சி, தஞ்சை, மதுரை, சேலம், கோவை, தர்மபுரி, ஈரோடு ஆகிய  மாவட்டங்களில் உள்ள  தலைமை தபால் அலுவலகங்களில் இன்று முதல் கங்கை நீர் விற்பனைக்காக வந்துள்ளது.