பத்திரிகையாளர்கள் மீது ம.தி.மு.கவினர் தாக்குதல்

Must read

சென்னையில் வைகோ கலந்துகொண்ட நிகழ்ச்சியில், செய்தியாளர்கள் மீது மதிமுகவினர் பயங்கரத் தாக்குதல் நடத்தினர்.
சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் வைகோ பங்கேற்ற நிகழ்ச்சியின் போது, செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் ஆவேசமாக பதில் அளித்தார். தான் பேசாததை பேசியதாக ஊடகங்கள் வெளியிடுவதாகவும் வைகோ குறிப்பிட்டார். இதையடுத்து, அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற சற்று நேரத்தில் செய்தியாளர்களை மதிமுகவினர் சூழ்ந்துகொண்டு கடுமையாகத் தாக்கினார்கள்.
aa
இதில், நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் பாலாஜி, ஒளிப்பதிவாளர் அகிலன் உள்ளிட்ட செய்தியாளர்கள் படுகாயம் அடைந்தார்கள்.  மேலும், செய்தியாளர்களின் கேமரா, மைக்குகளும்  ம.தி.மு.க. தொண்டர்களால் உடைத்தெறியப்பட்டன. இதில் செய்தியாளர்களை தாக்கிய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
இதற்கிடையே  இத்தாக்குதல் சம்பவம் ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான   நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
வைகோ கலந்துகொள்ளும் கூட்டத்தில் செய்தி சேகரிக்ச் சென்ற ஊடகவியலாளர்கள்  ம.தி.மு.கவினரால் தாக்கப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article