புதுடெல்லி:
ந்தியாவையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

கனிமொழி
                                                        கனிமொழி

மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது திமுகவை சேர்ந்த ராஜா தொலை தொடர்பு துறை மந்திரியாக இருந்தார். அப்போது நடைபெற்ற 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. முன்னாள் மத்திய மந்திரி  ஆர்.ராசா,  திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி  ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
வழக்குகள்  சம்பந்தமாக  கனிமொழி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் இன்று ஆஜரானார். ஆனால் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை  அதிகாரிகள் மேலும் அவகாசம் கேட்டதால் 2ஜி வழக்கு  வருகிற 25-ந் தேதிக்கும், அமலாக்கத்துறை  வழக்கு செப்டம்பர் 1-ந் தேதிக்கும் ஒத்தி வைக்கப்பட்டது