ஐகோர்ட்டில் திமுக வழக்கறிஞருக்கு சரமாரியாக வெட்டு

Must read

 
சென்னை:
கோர்ட்டில் உள்ள வழக்கறிஞர் அறையில் இருந்த மணிமாறன் என்ற திமுக வழக்கறிஞர் மர்ம நபரால் வெட்டப்பட்டார்.

வெட்டபட்ட ஐகோர்ட்டு வழக்கறிஞர்
                                         வெட்டபட்ட ஐகோர்ட்டு வழக்கறிஞர்

 
சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் மணிமாறன். இவர் திமுகவை சேர்ந்த வழக்கறிஞர். இவரது அறை எண் 129. இன்று மதிய வேளையில் மரம் நபர் ஒருவர் மணிமாறன் அறைக்கு வந்து அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு சக வழக்கறிஞர்கள் ஓடி வந்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆபத்தான நிலையில் மணிமாறனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். வழக்கறிஞரை வெட்டியவர் கைது செய்யப்பட்டதாக தகவல். வெட்டியதற்கான காரணம் தெரியவில்லை.

More articles

Latest article