பேஸ்புக்கில் பதிவு: தற்கொலை செய்துகொண்ட பிரபல பட தயாரிப்பாளர்!

Must read

குடும்பத்தினருடன் பட தயாரிப்பாளர் அதுல் தப்கிர்

புனே:

ராத்தி பட தயாரிப்பாளர் அதுல் தப்கிர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது சினிமா தயாரிப்பாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புனே மாவட்டம் பிம்புலே நிலக் பகுதியை சேர்ந்தவர் அதுல் தப்கிர், 35 வயதான இளைஞர். இவர் கடந்த 2013ம் ஆண்டு தயாரித்த படம் ‘தோல் தாஷே’ இந்த படம் சரியாக ஓடாததால் பெரும் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று ஆடம்பர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். ஆனால் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.  இதனைத்தொடர்ந்து சந்தேகம் அடைந்த ஓட்டல்  ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது அதுல் தப்கிர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அதன் பிறகு அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில்  படத்தயாரிப்பாளர் விஷம் குடிப்பதற்கு முன்பு ஃபேஸ்புக்கில்  போஸ்ட் போட்டு விட்டு விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

சமீக காலமாக  உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டுவிட்டு தற்கொலை செய்வதும், லைவ்-வாக  தற்கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் மூன்று இளைஞர்கள் பேஸ்புக்கில் ஆன் லைனில் இருந்துகொண்டே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் மும்பையை சேர்ந்த அர்ஜுன் பரத்வாஜ் என்ற பீகாம் மூன்றாம் ஆண்டு மாணவர், மும்பையில் உள்ள தாஜ் லேன்ட் என்ட்ஸ் எனும் ஹோட்டலின் 19-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளும் பதிவை பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது

More articles

Latest article