கன்னியாகுமரி,

ன்னியாகுமரி அருகே உள்ள களியக்காவிலையை சேர்ந்த  8 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச படம் அனுப்பியதாக  சென்னை உளவுபிரிவு போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அந்த மாணவி வாட்ஸ்அப்பில் வைத்திருந்த புகைப்படத்தை டவுன்லோடு செய்து, மார்பிங் முறையில் ஆபாச புகைப்படமாக மாற்றி அந்த புகைப்படங்களை பெண்ணுக்கு அனுப்பியது தெரிய வந்துள்ளது.

கடந்த சில   நாட்களாக ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் அந்த மாணவியின் வாட்ஸ் அப்புக்கு வந்துள்ளது. அதில் இருந்த  ஆபாச படக்குவியலில் தனது படமும் வந்தை பார்த்தும் அதிர்ச்சி அடைந்த மாணவி உடனடியாக தனது பெற்றோர் உதவியுடன் களியக்காவிளை போலீசில் புகார் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து  படம் அனுப்பிய செல்போன் எண்ணை கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த 5ந் தேதி சென்னை குமரன்நகர் காவல்நிலையத்தில் கடைசி யாக அந்த எண்ணின் செயல்பாடு துண்டிக்கப்பட்டது தெரிய வந்தது.

மேலும், இடையில் 2 நாட்கள் அந்த எண் குமரி மாவட்டத்தில் செயல்பட்டிருந்ததும் தெரியவந்தது.

அதையடுத்து சென்னை வந்த களியக்காவிளை போலீசார், குமரன் நகர் காவல்நிலையம் வந்து விசாரித்தனர். அப்போது இந்த மோசடி செயலில் ஈடுபட்டது அங்கு பணியாற்றிய புலனாய்வு பிரிவு போலீஸ் செந்தில் என்பது தெரியவந்தது.

இவர் உபயோகப்படுத்திய மொபைல் எண்,  போலி ஆவணங்களைக் கொண்டு சிம்கார்ட் வாங்கி யதும், அதன் மூலம் பல  பெண்களுக்கு ஆபாசப்படங்களை அனுப்பி தொல்லை கொடுத்ததை விசாரணையில் ஒத்துக்கொண்டார்.

அவரை கைது செய்து கன்னியாகுமரி அழைத்துச்சென்ற போலீசார் அங்கு கோர்ட்டில் ஆஜ்ர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலீசார் ஒருவரே இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.