சென்னை: 
பிரபல நடிகரும், விஜேவிமான ஆனந்த கண்ணன் காலமானார். அவருக்கு வயது 48.
சிங்கப்பூர் தமிழரான இவர் சன் தொலைக்காட்சியில் சிந்துபாத் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தார். 90 களில், அவர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான இருந்த ஆனந்த கண்ணன் புற்றுநோய் காரணமாக இறந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 30 ஆண்டு காலமாக ஒரு நிகழ்ச்சிப் படைப்பாளராகவும், நடிகராகவும் பலர் மனத்தில் இடம்பிடித்தவர் ஆனந்த கண்ணன்.
இவர்,  AKT Theatres எனும் கலை அமைப்பை நிறுவி, நிர்வகித்துவந்தார் தமிழ்க் கலாச்சாரம் சார்ந்த கிராமியக் கலைகளைப் பயிலரங்குகள் வழி அவர் கற்பித்துவந்தார். சிங்கப்பூரில் பல பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவர் படைத்திருக்கிறார்.
அவரது மறைவுக்குச் சிங்கப்பூர்ப் பிரபலங்களும், இந்தியத் திரையுலகப் பிரமுகர்களும் தங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.